செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.. யார் யார் விண்ணப்பிக்கலாம் ?
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பிரதான மருத்துவமனையாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமில்லாமல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பதிவேடு உதவியாளர் மற்றும் காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை, https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதி விரக்கம் செய்து கொள்ளலாம்.
வரும் 21 ஆம் தேதிக்குள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு நேரிடையாகவோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் அல்லது மருத்துவமனை முதல்வரின், cmpc_tn@ yahoo.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்