நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
01.09.2024 தேதியின் படி, செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 40 முதல் 50 வயது வரை இருக்கலாம். கணக்கு உதவியாளர் மற்றும் வட்டார புள்ளி விபர பதிவாளர் பதவிக்கு 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
இதர பணியிடங்களுக்கு அதிகப்படியாக 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மருத்துவ அலுவலர் பதவிக்கு எம்பிபிஎஸ்சி பட்டம் பெற வேண்டும். மேலும் மருத்துவராக பதிவு செய்ய வேண்டும்.
பதவிக்கு ஏற்ற பாடப்பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும். மருத்துவமனை பணியாளர் பதவிக்கு மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ அலுவலர் பதவியைத் தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்பப்படவுள்ளனர்
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://namakkal.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சென்று கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் 28.10.2024 மாலை 5 மணி வரை
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம் - 637 003.
தொலைப்பேசி எண் - 04286 281424
0 கருத்துகள்