அக்.15 முதல் ஆதார் கார்டு பெற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது

புதிய ஆதார் கார்டுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் தாசில்தார் விசாரணைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கார்டு கோரி மையங்களில் விண்ணப்பித்தால் விசாரணைக்காக ஆன்லைன் மூலம் யு.ஐ.டி.ஏ.ஐ., ஒருங்கிணைந்த மையத்திற்கு செல்லும்.

ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அது குறித்து விசாரணை நடத்த அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

தாசில்தார் தலைமையில் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் உண்மை தன்மையை நேரடியாக கள ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும். தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் கார்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்