சிம்புவின் 49வது படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிம்பு மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. அசோக் செல்வன் , த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு எதுவும் துவங்கவில்லை. இதனிடையே கடந்த சனி கிழமை "தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (ஜென் z 1995 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்" எனப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
இன்று படம் குறித்த முழு அறிவிப்பை இன்று வெளியிடுவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'டிராகன்' 'ஓ மை கடவுளே', படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து சிம்புவின் 49வது படத்தை இயக்குகிறார். ஏஜிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. என்று சிம்பு அறிவிப்பை பதிவிட்டுள்ளார்.
0 கருத்துகள்