அந்தப் பட்டியலுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) தேர்ச்சி பெற்றதற்கான நகல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணை உட்பட ஆவணங்களை இணைக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லையெனில் அதற்குரிய 'இன்மை' அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இதற்கிடையே பட்டியலில் இருந்து தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர் முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே, மாவட்ட அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
0 கருத்துகள்