நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று (10-10-24) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வௌியாகி உள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று தமிழகத்தை தவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பிற பகுதிகளில் படத்தின் சிறப்பு கட்சி அதிகாலையிலேயே திரையிடப்பட்டது.
ரஜினி வேட்டையன் பட திருவிழா போல் கொண்டாடிய ரசிகர்கள், படத்தை பார்த்து விசில் சத்தத்தால் திரையரங்குகளை அதிரவைத்து வருகின்றனர்.
0 கருத்துகள்