அக்டோபர் மாதம்.. ரூ.3000 வங்கி கணக்கில் தரப்போகும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் வரும்?

அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ள 3 முக்கிய திட்டங்கள் மூலம் மாதம் ரூ. 3000 உங்க வங்கி கணக்கில் வழங்கப்பட உள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தொகை அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது . அந்த திட்டங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே விரிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவு செய்யப்பட்டு விட்டது.

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மொத்தம் இரண்டரை லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு இந்த மாதம் 14ம் தேதி சனிக்கிழமை பணம் வழங்கப்படும் 15ம் தேதி விடுமுறை நாள் என்பதால் பணம் வழங்கப்படாது.

அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி மேலும் ரூபாய் 2000 மொத்தமாக வரும். புதுமை பெண் திட்டம் புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை மூலம் இந்த பணம் வழங்கப்படும்.

இந்த நிலையில்தான் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்